ஈரோடு, ஜன. 30
அமைச்சர் முத்துசாமி வேட்பாளர் சந்திர குமாருடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிக்கும் நடந்தே சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
அவர் திருநகர் காலனி கே என் கே ரோடு கண்ணையன் வீதி ராமமூர்த்தி நகர் சொக்காய் தோட்டம் போன்ற பல்வேறு இடங்களுக்கு வீதியாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1. 60 கேடி பேர் விண்ணப்பித்தனர் அதில் 1.16 கோடி பேருக்கு உதவி தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. விடுபட்ட மற்ற விண்ணப்பதாரர்களுக்கும் உரிமை தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.