நாகர்கோவில் ஜன 29
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் தலைமையில் அரசு போக்குவரத்துக்கழகம் ராணித்தோட்டம் தலைமை அலுவலகத்தில் ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் அரசு போக்குவரத்துகழக ஒட்டுநர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் சாலையில் ஓட்டுநர்கள் போட்டி பொறாமையை ( EG0 ) கைவிட்டால் தான் விபத்தின்றி பணிபுரிய முடியும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி சாலை விதிகள் குறித்தும் அதை கடைபிடிப்பது குறித்தும் ஒட்டுநர்களுக்கு விளக்கி அறிவுரை வழங்கினார்.
போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் , துணை மேலாளர்கள் , கிளை மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஒட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.