திண்டுக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
திண்டுக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், திண்டுக்கல் நகர் ASP.சிபின் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ, திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்