தேனி ஜனவரி 27
தேவதானப்பட்டி கிளை நூலகத்தில் 76 வது குடியரசு தின விழா நல்நூலகர் சு.சிவராமன் தலைமையில் வாசகர் வட்ட தலைவர் ரெ.சந்திரன் அவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வாசகர் வட்ட கூட்டத்தில் கௌரவத் தலைவர் சி.சுப்பிரமணியன், வாசகர் வட்ட பொருளாளர் ப.விஜயன் முன்னிலையில் திரு காமிதாஸ் பி. ஏ., மற்றும் திரு அ.அருணாசேகர்பி.ஏ., ஆகியோர் தலா ரூ.5000/- செலுத்தி பெரும்புரவலராகவும்வாசகர் வட்ட தலைவர் திரு ரெ.சந்திரன், திரு சு.சிவராமன், தேவி மெஸ் உரிமையாளர் திரு வா.சசிகுமார் ஆகியோர் தலா ரூ.1000/- செலுத்தி புரவலராகவும்* தங்களை இணைத்துக் கொண்டனர். நூலகர் ச.நாகராஜன் நன்றியுரையுடன் இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.