கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் டவுன் பஞ்சாயத்து தலைவர் அமானுல்லா தேசியக்கொடி ஏற்றினார். அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் ஊத்தங்கரை லயன்ஸ் கிளப் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடினர். உதவி தலைமை ஆசிரியர் சக்தி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். லயன்ஸ் கிளப் தலைவர் ஆர்.கே ராஜா, செயலாளர் சின்னராஜ், முன்னாள் தலைவர்கள் டாக்டர் பத்மநாபன், டாக்டர் நகுலன், கல்வி குழு தலைவர் கண்ணாமணி, செயலாளர் ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பி.டி.ஏ தலைவர் தேவராசன் தேசியகொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ராதிகா, பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் அலினா சில்க்ஸ் உரிமையாளரும் சமூக சேவகருமான பாபு அப்துல் சையத், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை எம்.எல்.ஏ அலுவலகத்தில் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார். மாவட்ட துணைத் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சுவாமிநாதன், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், அம்ஜத், சம்பத் உள்ளிட்ட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை டி.எஸ்.பி அலுவலகத்தில் டி.எஸ்.பி சீனிவாசன் தேசிய கொடி ஏற்றினார். ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முருகன் தேசியக்கொடி ஏற்றினார். ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமால் தேசிய கொடி ஏற்றினார். வெங்கடதாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,வாட்டர் கேன் மற்றும் இனிப்புகள் மாவட்ட பிரதிநிதி காமராஜ் வழங்கினார். சோளக்கப்பட்டி கிளைச் செயலாளர் சிவக்குமார், பாப்பனுார் கிளைக் கழக செயலாளர் சங்கர், வெங்கடதம்பட்டி கிளைச் செயலாளர் வீரமணி மற்றும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.