கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 15 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு 15ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் விதமாக பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி நான்கு முனை சந்திப்பு எல். ஐ. சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக
அரசு பள்ளி வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் முருகன்,தேர்தல் துணை வட்டாட்சியர் சக்தி, யுனிக் கல்லூரி தாளாளர் முனைவர் அருள், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குபேந்திரன், மோகனா,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.