கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2023 ம் ஆண்டிற்கான பசுமை சாதனையாளர் விருதுக்குரிய தேர்வுக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்பொழுது:
2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது, தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கும் பொருட்டு பசுமை சாதனையாளர் தேர்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.
பசுமை சாம்பியன் விருதுக்கு 8 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வுசெய்யும் குழு மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மூன்று தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதில் தேர்வு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் உலக சுற்றுச்சுழல் தினத்தன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கப்படவுள்ளது 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் செல்வி. கார்த்திகேயனி இ.வ.ப., மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் .மு.செல்வகுமார், உதவி சுற்றுச்சுழல் பொறியாளர் .ப.கிருஷ்ணன், உதவி பொறியாளார்கள் .நீலமேகம், .வினோதினி, மாவட்ட கல்வி அலுவலர் .மணிமேகலை, பசுமை தோழி செல்வி.நட்டார்கனி, மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
பசுமை சாதனையாளர் விருதுக்குரிய தேர்வுக் குழுக் கூட்டம்
Leave a comment