ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் 76வது குடியரசு தின விழா துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு உறுதிமொழி” வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தார்
துணைவேந்தர், என்சிசி அணிவகுப்பு மரியாதையை ஏற்று,உயர் பதவி பெற்ற என்சிசி கேடட்கள் பவானி, சந்தனாஸ்ரீ, ஹரிகிருஷ்ணா, பாண்டி லோகேஷ் ஆகியோருக்கு பேட்ச் அணிவித்து பாராட்டினார். கலசலிங்கம் குழும கல்வி நிறுவன முதல்வர்கள், டீன்கள், இயக்குநர்கள், அனைத்துபேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை மாணவர் நலத்துறை, உடற்பயிற்சி,என்சிசி,
என்எஸ்எஸ்,துப்புரவு, பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.