தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டம் கடத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.முருகன் மீது பல்வேறு புகார்கள் அவ்வப்போது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பெரியூர் வத்தல் மலைப்பள்ளியில் பெண் பிள்ளைகளிடம் ஆபாசமாக அத்துமீறி நடந்த தற்காலிக ஆசிரியரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறான அறிக்கை அளித்தது. போலிக் கல்விச்சான்றிதழ் எனக் கூறி தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த ஒரு ஆசிரியருக்கு மீளப் பணி வழங்கும் விவகாரத்தில் லட்சக்கணக்கில் இலஞ்சம் பெற்றது. அந்த ஆசிரியர் பள்ளிக்கு செல்லாமலேயே அவருக்கு பதிலாக ITK பணியாளரை கல்விப்பணியில் ஈடுபட வைத்தது. தலைமையாசிரியரைக் கொண்டு பதிவேடுகளை மாற்றம் செய்தது. கேத்து ரெட்டிப் பள்ளியில் 30 இலட்சத்திற்கும் அதிகமாக பள்ளிக்கு நன்கொடை அளித்து SMC மூலம் முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஊர்ப் பொதுமக்கள் கல்விக் கடவுளான சரஸ்வதி சிலை வைத்ததற்காக அந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க சொல்லி மிரட்டுவது,
குற்றம் உறுதி செய்யப்பட்ட காரிமங்கலம் கண்டக பைலில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொய்யான அறிக்கையை கல்வித்துறைக்கு அளித்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவ்வொன்றியத்தில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் அவர் மீது பாலியல் புகார் அளித்த நிலையில் மாநில மகளிர் ஆணையம் அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை உறுதி செய்து அவரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது.
இவர் ஏற்கனவே பணிபுரிந்த கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இதைப் போலவே இவர் மீது பல புகார்கள் வந்துள்ளது. இவ்வாறாக தொடர்ச்சியாக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இதுவரை இவர் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மெளனம் சாதித்து வருவது பெண் ஆசிரியர்களிடையே அச்சத்தையும் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது…