நல்லத்துக்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை எம்.எல்.ஏ.ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 18ம் தேதி பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்கத்தொடங்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்படை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை தாலுகாவில் நல்லத்துக்குடி, செறுதியூர், கோடங்குடி, பொன்னூர், பாண்டூர், கொற்கை, ஆனந்ததாண்டவுபரம், பொன்மாசநல்லூர், கீழமருதாந்தநல்லூர், மணல்மேடு உட்பட பல்வேறு கிராமங்களில் பயிர்கள் வயலில்சாய்ந்து முளைத்து பாதிப்படைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட நல்லத்துக்குடி கிராமத்தில் முளைத்த நெற்பயிர்களை எம்.எல்.ஏ.ராஜகுமார் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து நல்லத்துக்குடி நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்துகொண்டுவந்த நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் முருகமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.