காவேரிப்பட்டினம் நகர் பகுதியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு சேர்ந்தது அல்ல – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காசிலிங்கம்.
கிருஷ்ணகிரி ஜனவரி 26: காவேரிப்பட்டினம் நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டப டிரஸ்ட் கட்டிடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் என்று பொய்யான தகவலை பரப்பி காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் சுப்ரமணி குழப்பம் செய்வதாக, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆவணங்களுடன் வந்த காசிலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த காவேரிப்பட்டினம் நகரின் மையத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து காலி இடம், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் இந்த இடம் காந்தி நினைவு மண்டப டிரஸ்ட் எனும் பெயரில் பயன்படுத்தபட்டு உள்ளது. இந்த இடம் காங்கிரஸ் கட்சிக்கு தான் சொந்தம் என்று காங்கிரஸ் வட்டார தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான சுப்ரமணி ஆட்களை சேர்த்துக் கொண்டு பிரச்சனை செய்வதாக நான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் முடிவில் இது முழுக்க காந்தி நினைவு மண்டப டிரஸ்ட்க்கு தான் சொந்தம் என்று நீதிமன்றம் தெளிவாக உத்தரவு வழங்கி உள்ளது. எனினும் காங்கிரஸ் சுப்ரமணி இதில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனை செய்கிறார். இது குறித்து இரண்டு தரப்பும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் தங்களது தரப்பு நியாயத்தை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி எங்கள் தரப்பு ( காசிலிங்கம் தரப்பு ) மட்டும் ஆவணங்களுடன் ஆஜர் ஆனோம். சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் யாரும் வராத காரணத்தால விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. இது முழுக்க காந்தி நினைவு மண்டப டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம். காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர் அறிவிப்பு விரைவில் வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை பெற்று மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக முயற்சி செய்யும் சுப்ரமணியின் நாடகம் முறியடிக்கபடும் என கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக ஆர்வலரும், சமூக நுகர்வோர் நலப் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தார்.