தஞ்சாவூர் ஜன 26.
18 வயது நிரம்பியவர்களுக்கு கல்வி கடனில் உத்தரவாத பிணைய கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்
தஞ்சாவூரில்அண்ணா நூற்றாண்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா நடந்தது .இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். துணை ஆட்சியர் (பயிற்சி)சங்கர நாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு 185 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 கோடியே 89 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கல்வி கடனுக்கான காசோலை களை வழங்கிப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில்வதற்காக கல்வி கடன் வேண்டி வித்யா லட்சுமி இணைய தளம் மூலம் 4,129 விண்ணப்பங்கள் ஜன் சமர்த் இணையதளத்தின் மூலம் 359 விண்ணப்பங்களும் பல்வேறு வங்கிகளிடம் சமர்ப்பிக் கப்பட்டன. விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகளின் விண்ணப்பங்களின் நிலை குறித்து அந்தந்த விண்ணப்பதாரர் களிடம் செல்போன் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது
இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி கடனுக்காக விண்ணப்பித்துள்ள 4,448 விண்ணப்பங்களின் நிலை குறித்து விவரம் சேகரிக்கப்பட்டவுட ன் நிலுவையில் உள்ள விண்ணப் பங்கள் தொடர்பாக விரைந்து பரிசீலிக்க சம்பந்தப்பட்ட வங்கிகளு க்கு ஏற்ற அறிவுரைகளும் தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும்.
கல்வி கடன் பெறுவதில் 18 வயது நிரம்பாதவர்களுக்கு யாராவது ஒருவர் ஜாமீன் கையெடுத்து அளிக்க வேண்டிய நிலை உள்ளது 18 வயது நிரம்பியவர்கள் முழு மனிதர்கள் தாய் தந்தையர் பாதுகாவலர்களுக்கு அப்பாற்பட்ட வர்கள் .அவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதில் ஜாமீன் கையெழுத்து தேவை என்பது எந்த ஒரு வகையி ல் நியாயம். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் கருத்தை கோரிக்கையாக ஏற்று முதலமைச்சருக்கும், நிதித்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் .இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், பட்டுக்கோட்டை நகர சபை தலைவர் சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.