ஊட்டி. ஜன. 26.
யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூற்றாண்டுகளை கடந்த நீராவி மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த மலை ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலமாகவே இயக்கப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய முறையில் தாவர எண்ணெயில் பயன்படுத்தப்பட்டன. நிலக்கரி தட்டப்பாடு மாசுபாடு குறைவு தொழில்நுட்ப காரணமாக இந்த மலரையில் தாவர எண்ணெய் மூலமாக இயக்கப்பட்டது. அதிலும் காற்று மாசு என்பதால் டீசல் மூலமாக இயங்கும் வகையில் அனைத்து ரயில் இன்ஜின்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2002 இல் இருந்து பர்ன்ஸ் ஆயில் மூலமாக இயங்கும் வகையில் ரயில் என்ஜின் மாற்றப்பட்டு செயல்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. மலை பிரதேசமான வனங்களின் ஊடாகவும் ஆறுகலுக்கு குறுக்காகவும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. செங்குத்து மலை சரிவுகளில் சுவிட்சர்லாந்த தொழில் நுட்பமான பல் சக்கர தண்டவாள அமைப்பில் ரயில்பாதை நிறுவப்பட்டது. இந்தியாவில் பிரசித்தி பெற்ற மலை ரயில் பாதையில் பயணிக்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்பட்ட இந்த மலைரயில் மத்திய மாசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தடை விதித்துள்ளது. இதனால் பர்னஸ் ஆயில் இன்ஜின்களை டீசல் மூலம் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து குன்னூர் பணிமனையில் சீனியர் மாணிக்கம் தலைமையில் 3 மலைரயில் இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. திருச்சி பொன்மலை பணிமனையில் 37397 எண் கொண்ட பெட்டா குயின் என அழைக்கப்படும் பர்னஸ் ஆயிலில் இயங்கும் கடைசி இனஜின் தற்போது டீசலுக்கு மாற்றப்பட்டு விட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடன் டீசலில் இயங்கும் இன்ஜின் மலை ரயில் சோதனை முடிந்து நடைமுறைபடுதப்பட்டுள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள் கூறும்போது ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலைரயில் டீசலில் இன்ஜின் இயங்க பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க இந்த மலைரயில் பெரிதும் பயன்படும் என தெரிவித்துள்ளனர்.