திண்டுக்கல், மே 16
மதுரை வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டாரத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இதன் ஓர் அங்கமாக சித்தையன்கோட்டையில் ச. சந்தரு தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டிண் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப்பொறி வைப்பது குறித்து செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது.
மேலும் அவ்வண்டை கட்டுப்படுத்தும் சில ரசாயனங்கள் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கினர். இதில் விவசாயிகள் பங்களித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.