மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா மகளிர் மேனிலைப் பள்ளியானது கடந்த
70 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஒழுக்கம் விளையாட்டு மற்றும் கலைகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் இப்பள்ளியில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் 10.11.12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 99 சதவிகிதம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் 12 ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய 721 மாணவிகளில் 720 பேர் தேர்ச்சி பெற்று 99.8% தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி மு.கார்த்திகா 590/600 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார்.
11 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய 716 மாணவிகளில் 714 பேர் தேர்ச்சியடைந்து 99.7% தேர்ச்சி பெற்றனர். இதில் அறிவியல் பிரிவில் நா.சு.பிரீத்திகா மற்றும் கலைப்பிரிவில் பா.அக்சயா சேசாத்திகா ஆகிய மாணவிகள் 575/600 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்றனர்.
10 ஆம் வகுப்பில் தேர்வு எழுதிய 559 மாணவிகளில் 557 பேர் தேர்ச்சியடைந்து 99.6% தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி ஜா.ஹெரூபீன் டிரினிட்டி 496/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
இப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற சிறப்பாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் ஜோஸ்பின் ராணி, மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளித் தாளாளர் ஞானசௌந்தரி பாராட்டு தெரிவித்தார்.