மதுரை ஜனவரி 24,
மதுரை மாவட்டம் காதகிணறு கிராமத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்டம் காதகிணறு கிராமத்தில் உள்ள RC மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளரான சங்கர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆயிஷா யூனியன் கிழக்கு அலுவலகம், மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்கி குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வையும் அவ்வாறு நிகழ்ந்தால் மாணவர்களுக்கு ஏற்படும் மன இன்னல்கள் பற்றியும் மேலும் இவ்வாறு தங்களைச் சுற்றியோ தெரிந்தவர்களுக்கோ இந்த செயல் நடக்கவிருந்தால் அதனை உடனே 1098 என்னும் தொலைபேசி எண்ணிற்கு அணுகி தகவல்களை தெரிவிக்கலாம் இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் தங்களது விபரங்கள் பாதுகாக்கப்படும் மேலும் பெண்களுக்கான உதவி எண் 181 இந்த எண்ணானது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், தங்களது வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் தகவல்களை தெரிவிக்க இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா
நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.