ஈரோடு ஜன 22
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று நேரலையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி, ராஜாஜிபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வளையகாரவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ரஹார வீதியில் உள்ள மஹாஜன உயர்நிலைப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உட்பட உதவி பலர் உடனிருந்தனர்.