இரணியல், ஜன-21
இரணியல் அருகே சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டு இருந்தது. உறவினர் ஒருவரின் மரண நிகழ்ச்சிக்கு சென்றதாக தெரிகிறது. கார் சுங்கான் கடையை தாண்டி களியங்காடு சந்திப்பு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி மோதியதில், கட்டுப்பாட்டு இழந்த கார் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் இருந்த சென்னை அண்ணாசாலை, ஜோதி நகரை சேர்ந்த அகில் (24) என்ற வாலிபர் வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அகிலின் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.