சென்னை. மே-15,
கர்நாடக தொழில் வர்த்தக உட்டமைப்பு சார்பாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் தக்ஷின் பார்த் உத்சங் – 2024 என்னும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கான, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, இலட்சதீவுகள் ஆகிய மாநிலங்களை உன்டக்கிய சுற்றுலாத் துறைக்கான மாநாடு மற்றும கண்காட்சி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஜூன், 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுன்ளது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஏ.எம். விக்கிரம ராஜா கலந்து கொண்டார். மேலும் கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர லோத்தி. அமைப்பின் ஆலோசனை குழுத் தலைவர் சிவ சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் துணை நிர்வாக இயக்குனர் பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர்
கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர லோத்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கர்நாடக அரசின் சுற்றுலாத் துறையுடன் இணைந்து கர்நாடகா வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (எஃப்.கே.சி.சி ஐ ) இம்மாநாட்டை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய மாநிலங்களின் சுற்றுலாத் திறனை வெளிப்படுத்தும் வகையில் முதலீடு வாய்ப்புக்கள் மற்றும் உள்ளூர் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தை வலியுறுத்தும் வகையில் இது நடைபெறும் என்று கூறினார். மேலும் இலட்சதீவுகள் உள்பட தென்னிந்திய மாநிலங்களின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளது அதேபோல் தென்னிந்தியாவை இணைத்து ஒரு சுற்றுலா தளத்தையும் அமைக்க இந்த கண்காட்சி உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.