அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா தென்தாமரைகுளம். ஜன. 22.கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விலங்கியல் துறையும்,நாகர்கோவில் சாராஸ் பதிப்பகமும் இணைந்து ‘வன உயிரினங்களைப் பாதுகாத்தல்’ மற்றும் ‘விலங்குகளின் வாழ்வியல் முறைகள்’ என்னும் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஏ. செந்தில்குமார் இறைவணக்கம் பாடினார். விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டி தலைவர் ஜி. என். பாலமுருகன் குத்துவிளக்கேற்றினார். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஏ. சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். ற்றி. எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் இன்ஜி. எஸ். பைஜூ நிஷத் பால் புத்தகங்களை வெளியிட, முதல் பிரதியினை விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டியின் செயலாளர் சி. ராஜன் பெற்றுக் கொண்டார். இரண்டு புத்தகங்களின் நூலாசிரியரான விலங்கியல் துறைத்தலைவர் மற்றும் அகத்தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். டி. சி. மகேஷ் புத்தகச் செய்திகள் குறித்துக் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வினில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர். டி. ஜெயலெட்சுமி, தாவரவியல் துறைத்தலைவர் முனைவர். . பிரபாவதி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். கே. இளங்குமார், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். ஆர். தர்மரஜினி, பல்கலைக்கழக செனட் உறுப்பினர் முனைவர். ஏ. பிரபுமாறச்சன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர். கே. கவியரசு நன்றியுரை ஆற்றினார். விழா நிகழ்ச்சிகளை கணிதவியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். கே. எம். திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். புத்தக வெளியீட்டு விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics