இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ – பூதப்பாண்டி – ஜனவரி -20 – பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்ச குளம் ஊரின் மேற்க்கு திசை யோறம் அமைந்துள்ளவேலி மலை வனச்சரகத்திற்க்குட்பட்ட மலை பகுதியாகும் இந்த மலையை சுற்றி சாலைகளும் குடியிருப்புகளும் அமைந்துள்ளது மாடு வளர்க்கும் விவசாயிகள் முன்பு அந்த மலைப் பகுதியில் தங்களது மாடுகளை காலை முதல் மாலை வரையிலும் மேய்த்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர் ஆனால் தற்போது வனத்துறையினர் மாடுவிவசாயிகள் மற்றும் மாடுகளால் வனங்கள் அழிவதுடன் வன விலங்குகளின் சுதந்திரமானநடமாட்டம் குறையும் என பல காரணங்களை காட்டி வனப்பகுதியினை முழுவதுமாக தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்துள்ளனர்கள் இதனால் வனப்பகுதிகள் செடி கொடி மரங்கள் என அடர்ந்து வளர்ந்துள்ளது இந்நிலையில் நேற்று மாலையில் அந்த மலையிலிருந்து திடீரென தீ பிடித்து எரிந்து வருகிறது இது குறித்து இந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் வனத்துறையினர் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு இயந்திரங்கள் கொண்டு சென்று இந்த தீயை அணைக்க முடியாது அதற்க்குள்ள சூழ்நிலையான பாதை இல்லை என்று கூறி வருகிறார்கள்
இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics