கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு மஞ்சள் இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர். இந்த விழாவில் திருக்குறள் கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து முதல்வர் அவர்களிடம் விருது பெற்ற நமது நாடார் சங்கத்தின் சார்பில் நாகரசம்பட்டி குருகம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் அவருடைய குழந்தை நேசிகா அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது அதேபோல் அகரம் கிராமத்தைச் சார்ந்த வெங்கடாசலம் குமாரர் சஞ்சய் அவர்கள் மதுரை மகாஜனம் நடத்தும் போலீஸ் அகாடமி யில் பயின்று BSF ARMY நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்து உள்ளார் அவருக்கும் மரியாதை செய்தனர் இதைத்தொடர்ந்து இரண்டு கல்லூரி மாணவிகளின் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில்
செயலாளர் பாலச்சந்தர் பொருளாளர் சங்கர் முன்னாள் சங்க தலைவர் சிவகுமார் முன்னாள் செயலாளர் சேகர் முன்னாள் பொருளாளர் ராமமூர்த்தி மற்றும் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட நாடார் சங்க தலைவர் ரவி நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்