நாகர்கோவில் ஜன 20
ஜனவரி 23ஆம் தேதி குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜன.23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும்
அப்போது, முந்தைய குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கான பதில் அளிக்கப்படும். மேலும்
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும். மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட
ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.