திருப்பூர், ஜன. 18:
25-வது வட்ட கழக அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 108வது பிறந்தநாள் விழா 25-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பாக ஜீவா நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு எம்ஜிஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில்25.k
பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கவுன்சிலர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் திலகர் நகர் சுப்பு, வேலம்பாளையம் பகுதி கழக அவை தலைவர் V.K.P மணி, துணை தலைவர் சோளிபாளையம் மணி, ஆறுமுகம், வெள்ளியங்கிரி, மாணிக்கம், கண்ணன், வீ ரையன், மூர்த்தி, சூரியா ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும் விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவி அம்மா ஆட்சியை எடப்பாடியாரின் தலைமையில் அமைப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.