சேலம்,ஜன.17
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மெய்யனூர் கிளை முன்பு தொமுச வின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மணி,சேலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொமுச மத்திய சங்கத் தலைவர் ஸ்ரீதர்,பொதுச் செயலாளர் மனோகரன்,பொருளாளர் முருகன்,மத்திய சங்க அலுவலக செயலாளர் சுப்பிரமணியன்,மெய்யனூர் ஓட்டுநர் செயலாளர் பழனிவேல்,நடத்துனர் செயலாளர் ஜெயக்குமார்,தொழில்நுட்ப செயலாளர் ராஜேஷ், கண்ணன்,மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள் அனைத்து கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் தொமுச சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டாடினர்.