கன்னியாகுமரி மே 14
குமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி கடந்த 15 நாட்களாக காலை மற்றும் மாலையில் நடந்தது.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது.விழாவில் கன்னியாகுமரி டிஎஸ்பி , மகேஷ்குமார் ,தோவாளை தாசில்தார் கந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் , திமுக நிர்வாகி தாமரை பிரதாப்,. ரவிசந்திரன்,ஜெயபாலன்,ஜெயம் சந்திரசேகர், பள்ளி தாளாளர் அருள் ஞானபெல் , முன்னாள் வாலிபால் வீரர். மணியாச்சி என்ற பண்டார குட்டி, குமரி மாவட்ட வாலிபால் க்ளப் செயலாளர். டென்னிஸ்,. அமுதன், . ஜெயமணி, ஆல்வின் , . ஜில்லி ஆல்வின் முன்னாள் வாலிபால் வீரர் த. லிங்கம், தாமரைக்குளம் கஸ்பா சபை செயலாளர். கால்வின், கிராம நிர்வாக அலுவலர் சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் வாலிபால் பயிற்சியாளர்கள் அசோக், கண்ணன், அருண், ராகுல்,பவித்ரா ஆகியோர் கொளரவிக்கபட்டனர்.