திருவள்ளூர் மாவட்டம், சென்னை, அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு, அரசு உயர் நிலைப் பள்ளியில் வளாகத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
ஆரிக்கம்பேடு
அரசு பள்ளியின் தரம் உயர, நாளும் கடுமையாக உழைத்தது வருபவரும்,மாணவர்கள் வெற்றிக்கு நம்பிக்கையோடு வழிகாட்டி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் முதலாவது நிகழ்வாக தொழிலதிபர், ஜே.ஆர்.ஜி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ஆர்.நடராஜன் மற்றும் உமா நடராஜன் நன்கொடையாக ரூபாய் 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. பள்ளியின் புரவலத் திட்டத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அடுத்ததாக தொண்டுள்ளம் கொண்ட ஆகாஷ் மற்றும் சுபாஷ் நண்பர்கள் இணைந்து ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான ஒலிபெருக்கி, நன்கொடையாக தந்தமைக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில், எஸ்எம்சி கல்வியாளர்
அறவாழி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி , மற்றும் சுமித்ரா,ஜெயலக்ஷ்மி, சங்கரேஸ்வரி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.