கோவை ஜன:10
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள இந்தூர் பப்ளிக் பள்ளியில் ஜனவரி 3 முதல் 5 தேதி வரை தேசிய அளவிலான குவாங்கிடோ போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு,கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா ஒடிஸா ஜம்மு அண்ட் காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 25 மாநிலங்களில் 700-கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு குவாங்கிடோ அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு துணைத்தலைவரும் ஒருங்கிணைப்பாளரான பிராங்கிளின் பென்னி தலைமையில் பயிற்சியாளர் அமிர்தராஜ் முன்னிலையில் கோவை மாவட்ட சான் அகாடமி ஆஃப் மார்ஷல் ஆர்ட்ஸ் மற்றும் கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி மாணவ மாணவியர்கள் 11 மாணவர்கள் ஃபுல் கான்டக்ட் ஃபைட்டிங்,செமி காண்டாக்ட் ஃபைட்டிங் மற்றும் குவான் ஆகிய மூன்று பிரிவுகளிலும் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி
13 தங்கம்,
5 வெள்ளி,
3 வெண்கலம்,
என 21 பதக்கங்களை வென்றனர்.
மார்ச் மாதம் நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றது குறிப்பிடதக்கது
இதில் ஓவரால் சாம்பியன்ஷிப் டிராபி மூன்றாவது இடத்தை தமிழகம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசுகையில் எங்களது மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் வெற்றிபெற வைப்பதே எங்களது இலக்கு என்றும்
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எங்களது கிளைகளை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்த கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் மேலும் இதற்கான போதிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.