சுசீந்திரம்.ஜன.9
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சிவசுப்பிரமணிய பிள்ளை 58 இவர் தனியார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி ஆறுமுகசெல்வி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் மனவிரக்த்தியில் இருந்தவர் தற்கொலை செய்து இறந்து விட்டார். தனது மனைவி இறந்ததிலிருந்து மன வருத்தத்தில் இருந்த சிவசுப்பிரமணிய பிள்ளை நேற்று இரவு தனது மகன் சிவராஜன் 21 இவர் பி.காம் படித்துள்ளார் இருவரும் இரவில் இருந்து பேசிக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். நேற்று காலை சிவசுப்பிரமணிய பிள்ளையின் தம்பி காசி அவ்வழியாகச் செல்லும் பொழுது தனது அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் அப்பொழுது இருவரும் இருக்கையில் இருந்தவரே இறந்து இருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக பின்னால் சென்று கதவை உடைத்து பார்த்த போது இருவரும் ஏதோ விஷம் அருந்தி இறந்த நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக காசி சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் சுசிந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த ஒரு மாதத்தில் அப்பாவும் மகனும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.