மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் மதுரை மாவட்ட சுற்றுலா துறை மற்றும் மாமதுரையர் அமைப்பின் ஏற்பாட்டில், மாமதுரையின் பாரம்பரிய பொங்கல் கலை மற்றும் பண்பாட்டு திருவிழா மாபெரும் நிகழ்வாக 2025 ஜனவரி 15 ந்தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பாரம்பரிய பொங்கல் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் பயணம் இதன் மூலம் தமிழர் பாரம்பரியம் உலகம் முழுவதும் வெளிச்சம் பார்க்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியாளர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர்
சோ.மு.ஸ்ரீபாலமுருகன், மாமதுரையர்
உலகத் தலைவர் முனைவர் க. திருமுருகன், மாமதுரையர் நிறுவனர் முத்து, தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்க தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவின் சிறப்பு அம்சங்களாக,.
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்படும் 25 வகையான பொங்கல் வகைகள்,
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,
உலகம் முழுவதிலிருந்து 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பங்கேற்பு, மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் பயணம், பண்டையகால விளையாட்டுப் போட்டிகள்,
கோலப்போட்டி மற்றும் மருதாணி வைப்பது, பொதுமக்கள் மகளிர் குழந்தைகளுக்கு சிறப்பு போட்டி,
வில்வித்தை போட்டி, உளி அடித்தல்
போன்றவைகள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் வழிநடத்தி மாமதுரையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க மாமதுரையர் அமைப்பு சார்பாக அகில உலகத் தலைவர்
முனைவர் க. திருமுருகன் விழாவை வழிநடத்த அழைப்பு விடுத்துள்ளார்.