அருமனை, ஜன- 7
அருமனை சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் வெளியே வந்தனர். அந்த சமயம் ஹோட்டலை பூட்டுவதற்காக ஷட்டரை கீழே இழுக்க முயன்ற போது, ஷட்டரில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று, பின்னர் ஹோட்டலின் ஷட்டரிலிருந்த கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்றை பிடித்தனர். பின்னர் பாம்பை குலசேகரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.