நாகர்கோவில் ஜனவரி 06
கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர்.R.ஸ்டாலின் (03.01.2025) அன்று பொறுப்பேற்று கொண்டார். எஸ்.பி.யாக பொறுப்பேற்றவுடன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும் குமரி மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கவாத்து பயிற்சியை பாா்வையிட்டு ஆயுதப்படை காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடர்ந்து மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பொருட்டும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொதுமக்கள் அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே சுலபமாக தெரிவிக்கவும், தன்னை தொடர்பு கொள்ளவும் whatsapp எண் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக எஸ் பி -யிடம் தெரிவிக்க 8122223319 வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தி இருப்பதாக மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.