தஞ்சாவூர். ஜன.4.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்
கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தில் நடைபெற்று வரும் கலைஞரின் கனவு இல்லம், கிராமப்புற வீடுகளின் பழுது, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பழங்குடியினர் வீட்டு வசதி திட்டம், பி எம் ஜன்மன் திட்டம், ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் புதிய சாலை, சாலை விரிவாக்கம் , நபார்டு சாலை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது
அப்போது நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் விரைவாகவும், தரமாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் , ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் செல்வராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.