திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தலைமை குழு உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். பேருந்து நிலையம் முன்பாக வைக்கப்பட்டிருந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள். முன்னதாக ஆண்டிபட்டி, மிளகாய் பட்டி, சீதாபுரம், அணைப்பட்டி, நிலக்கோட்டை, ராஜ தானி கோட்டை, தொப்பி நாயக்கன்பட்டி, தாதகப்பட்டி, வீலி நாயக்கன்பட்டி, பாப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை முன்னிட்டு உற்சாகமாக வானவெடி வெடித்து, தேவராட்டம் ஆடி கொண்டாடினர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.