கீழமணக்குடியில் திருச்சிலுவை வணிக வளாகம் பி.டி. செல்வகுமார் திறந்து வைத்தார் தென்தாமரை குளம் ஜன.,02. கீழ மணக்குடியில் 2025 புத்தாண்டை முன்னிட்டுநேற்று புதன்கிழமை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட திருச்சிலுவை வணிகவளாக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கீழமணக்குடியில் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.இதன் திறப்பு விழா புத்தாண்டு தினமான நேற்று காலை 8:30 மணிக்கு அருள் தந்தை ஜாண் வினோ தலைமையில் நடைபெற்றது. ஐநா சபை முன்னாள் முதன்மை ஆலோசகர் ஜெபமாலை வினாஞ்சி ஆராய்ச்சி, பங்குப் பேரவை துணைத் தலைவர் லாரன்ஸ்,செயலாளர் ஏர்க்லின், துணைச் செயலாளர் ஜெஸ்மின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக வளாக கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது ., எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் அதனால்தான் மாணவர்களை மனதில் வைத்து கலையரங்கம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் கட்டிக் கொடுத்த வருகிறேன். இன்று நான் கட்டிக் கொடுத்த இந்த வணிக வளாகம் மூலம் வரும் வருமானம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆதரவற்ற ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறேன். அதன் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண்ணுக்கு நடந்த செயல் கண்டிக்கத்தக்கது. குமரி மாவட்டம் முழுக்க பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை மற்றும் வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளை தீர்த்து வைக்க மகளிர் குழு அமைத்துள்ளோம். அன்பானவர்களே மாற்றம் முன்னேற்றத்திற்காக கலப்பை மக்கள் இயக்கம் போராடும் எங்களோடு கைகோர்க்க இளைஞர்களே வாருங்கள் என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், என்.ஆர். சிவ எழில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன், சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன், தென்தாமரை குளம் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், டாக்டர். ஜாண்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கலப்பை மக்கள் இயக்கச் செயலாளர் செந்தில் மோகன், மக்கள் நீதி மையம் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரீம், அழகப்பபுரம் ராஜசேகர் ஆச்சாரி, அரசு ஒப்பந்தக்காரர் மணிகண்டன், அருள் ஞானபெல், பத்திர எழுத்தர் பாலசுப்பிரமணியம், டாக்டர் நலம் குமார், கீழ மணக்குடி பெர்னாட்ஷா, கொட்டாரம் ரெகுபதி, சந்தையடி சிவராஜன், தென் தாமரை குளம் ராஜகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் முருகன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி செயலாளர் சுடலைமணி, கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஸ்ரீ ரங்கநாயகி,பேராசிரியர் ராமகிருஷ்ணன், ரவி முருகன், வரலட்சுமி, அனிதா, மேஜர் ராதாகிருஷ்ணன், ஆண்டிவிழா செல்வன், தென் தாமரை குளம் பால் ஜெபா மற்றும் பங்கு மக்கள்,பங்கு பேரவையினர், கலப்பை மக்கள் இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics