கோவை மாவட்டம் பழனியப்பா நகர் சௌவுரி பாளையத்தில் உள்ள கண்ணம்மாள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் அந்த மனுவில் கூறியதாவது, நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். சுமார் 452 சதுர அடி இடம் மற்றும் வீடு உள்ளது இந்த வீடானது எனது கணவர் சுயமாக சம்பாதித்த சொத்தாகும். எனது கணவர் 3-7-2006-ஆம் தேதியில் காலமாகிவிட்டார். எனக்கு சுமார் 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு வாரிசுகள் ரத்தினம், பழனிச்சாமி என்ற இரு வாரிசு ஆவார். எனது மகன் பழனிச்சாமி திருமணமாகாமல் 1- 11-2020 இல் காலமாகி ஆகிவிட்டார். எனது மகளுக்கு திருமணம் ஆன நிலையில் எனது பாகத்தை ரத்தினம் என்கிற மகளுக்கு எழுதிக் கொடுத்தேன். எனது மகள் 18-7-2023 இல் காலமாகிவிட்டார். எனது மருமகன் நாகரத்தினம் எனக்கு உணவு உடை கொடுக்காமல் இருப்பதோடு இந்த வீட்டை காலி செய்து கொடுக்குமாறு என்னை தினமும் துன்புறுத்தி வருகிறார். எனது மருமகனிடம் என்னை காப்பாற்றி எனது வீட்டை எனக்கு எழுதிக் கொடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறியிருந்தது.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics