கிருஷ்ணகிரி மே 14:
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அதிமுகவினர் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி 5 ரோடு அருகில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளர் கேசவன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு தமிழக முன்னாள்
முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி Kபழனிச்சாமியின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்த விழாவின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாசராசன்,
முன்னால் மாவட்ட செயலாளர் தென்னரசு, காத்தவராயன்,முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் சேக்காடிராஜன், நகர துணைச் செயலாளர் குரு, நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சரவணன், அவைத் தலைவர் ரியாஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த செந்தில், கமல், மாரியப்பன், மாரி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.