கன்னியாகுமரி டிச 31
குமரியில் நாம் தமிழர் கட்சியில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களிலும் ,கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பத்து இடங்களிலும் நடைபெற்றது.
கொட்டாரம் ,மயிலாடி ,வட்டக்கோட்டை ,மருங்கூர் ,மாதவலாயம்,தோவாளை ,தடிக்காரண் கோணம்,ஒற்றையால்விளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர்,மாவட்ட தலைவர் தீபக் சாலோமன் ,மாவட்ட செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட்,பொருளாளர் பன்னீர் செல்வம்,செய்தி தொடர்பாளர் விஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்