ஈரோடு, டிச.31-
ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 52). அவருடைய மனைவி அமுதா. இவர்களின் மகள் நீலாம்பரி.
சம்பவத்தன்று இவர்கள் 3 பேருக்கும் வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதன் பிறகு வீடு திரும்பிய அவர்களுக்கு மறுபடியும் வயிறு பிரச்சினை ஏற்பட்டது. இதனால்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது பற்றி விசாரித்த போது அவர்கள் 3 பேரும்
கடந்த 21-ந்தேதி இரவு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டதாகவும். இதனால் பாதிப்பு
ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அதிகாரி டாக் டர் தங்கவிக்னேஷ் உத்தர வின் பேரில் உணவு பாது காப்பு அதிகாரிகள் கேசவ ராஜ். செல்வன். அருண்கு மார் ஆகியோர் பாதிக்கப் பட்ட 3 பேரும் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட கடையில் சோதணை நடத்தினர்.
அப்போது கடைக்கு உரிமம் இல்லாதும் சுகாதாரமற்ற நிலையில் சமையல் அறை இருப்பதும் மற்றும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்தது
இதை தொடர்ந்து அந்த ஓட் டல் தற்காலிகமாக மூடப்பட் டது. இதற்கான உத்தரவு நகலை கடை உரிமையாளரி டம் அதிகாரிகள் வழங்கினர். இது குறித்து உணவு பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் கூறும்போது, ஓட்டலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வரை கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தபகுதியில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.