மதுரை டிசம்பர் 28,
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து கால்நடை மருத்துவ முகாம்
நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் சத்யபிரியா நிகழ்ச்சியில் பங்கேற்று கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனத்தை வழங்கினார். இதற்கு முன்பு கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தி அதனைத்தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுமார் 20 பயனாளிகள் ஊட்டச்சத்து மிகுந்த புண்ணாக்கு பெற்று பயனடைந்தனர்