ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
ராமநாதபுரம், டிச.27-
ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
டிசம்பர் 25
எங்கள் கொள்கை தலைவி வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களின் நினைவு நாளில்
சிவகங்கை சமஸ்தான முத்து வடுகநாதர் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தான பாஸ்கர சேதுபதியின் சம்பந்தியுமான இதம்பாடல் ஜமீன்தாருமான சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளையின் தலைவருமான
ஜமீன்தார் ஐயா மங்களநாதத்துரை”” அவர்களின் திருக்கரங்களால் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மங்கையர் குல மாணிக்கத்தை போற்றி வணங்கும் நிகழ்ச்சியினை
வாகை குணசேகரன் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகி பி பி ராஜா
தலைமையில் மணக்குடி இளையராஜா முன்னிலையில் இளம் பெண்கள் மற்றும் ஏராளமான தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து ரங்கநாயகி ஆதரவற்ற பெண்களின் இல்லத்திற்கு மின்விசிறி, 2 மூடைஅரிசியும் 40 உணவருந்து தட்டுகளும் பி பி ராஜா தனது சொந்த நிதியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முருகேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.