தஞ்சாவூர் மே 13
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 45 வாகனங்கள் தகுதி சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? பாதுகாப்பு , தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது
தஞ்சாவூர் ஆயுதப் படை மைதான த்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் 235 பள்ளி வாகனங்களும், பட்டுக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 260 வாகனங்களும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் 220 வாகனங்களும் என மொத்தம் 715 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 9 வாகனங்கள் பட்டுக்கோட்டை 17 வாகனங்கள் கும்பகோணத்தில் 19 வாகனங்கள் என மொத்தம் 45 வாகனங்களில் தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறைகளை நிறைவு செய்த பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அலுவலர்கள் கூறினர்.