குளச்சல் டிசம்பர் 26
தெற்காசிய மீனவர் தோழமை மற்றும் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்கம் இணைந்து குளச்சல் ஆழ்கடலிலே கடல் கிறிஸ்மஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மீனவர்களோடு இணைந்து கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமிய மதத்தினவரும் கலந்து கொண்டார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் இளம் பெண்களும், இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கடல் கிறிஸ்மஸ் விழாவுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமை தாங்கினார். குளச்சல் விசைப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன் மற்றும் செயலாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகுத்தனர். கிறிஸ்துராஜா என்ற மீனவர் விசைப்படகானது இயேசு கிறிஸ்துவுக்கு குடிலாக அலங்கரிக்கப்பட்டது. அந்தக் குடிலிலேயே குழந்தை இயேசுவின் சிறுபவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட பல விசைபடகிலும், நாட்டுப் படகுகளிலும், கட்டு மரங்களிலும் மீனவர்களும், பிற சமயத்தினரும் குடும்பமாக படகில் நாடு கடலுக்கு சென்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பாட்டு பாடி அனைவரும் ஆடல் பாடல் உடன் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துக்கள் நடுகடலிலே பகிர்ந்து கொண்டார்கள். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பண்ணி சர்ச்சில் கூறும்போது மனிதர்கள் இந்த பூமியிலே எப்படி வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக குழந்தை வடிவில் இந்த மண்ணுலகில் பிறந்தார். அந்த இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டும் மண்ணிலே மனிதனாக வரவில்லை மாறாக அவர் அனைத்து மத, இன, மொழி மக்களுக்காகவும் இந்த உலகத்துக்கு வந்தார். ஆகவே தான் இது சர்வ சமயத்தினரும் இணைந்து கடல் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அமைதியை கொண்டு வந்தார் ஆகவே நாங்கள் அனைவரும் எந்த மதத்தினராயினும் அமைதியாக வாழ்வோம் என்று ஆண்டவருடைய ஆசிர் வேண்டி இந்த விழா சிறப்பிக்கப்பட்டது.