இளையான்குடி: டிச:22
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சூராணம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2024- 2025 திட்டத்தின் கீழ் ரூபாய் 12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் கிழக்கு ஒன்றிய செயலாளர் வே.தமிழ்மாறன் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் முத்துகுமார் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா கமல் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.