குளச்சல், டிச. 26
வெள்ளி சந்தை அருகே அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதி வின்சென்ட் நகரை சேர்ந்தவர் ஜோஸ் பெர்லின் (52). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்திக் கொண்டு வீட்டிலேயே முடங்கி இருந்ததா கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தவர், நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு படுக்கை அறையில் உறங்க சென்றார். நேற்று காலையில் அவரது மனைவி மேரி ஷாலிமா என்பவர் அறையில் சென்று பார்த்தபோது ஜோஸ் பெர்லின் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து மேரி ஷாலிமா வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.