டிச. 26
இயேசுவின் புதுவாழ்வு ஊழியங்கம் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பாக ஏழாம் ஆண்டு கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக
எம் எல் ஏ செல்வராஜ் கலந்து கொண்டார். திருப்பூர் மாவட்ட கிருஸ்துவ அமைப்பு மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில்,
முத்தமிழறிஞர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற, கிருஸ்துமஸ் விழாவில் தமிழகத்தின் இரு கண்களாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். என்று பேசினார். பின்னர் பகுதி செயலாளர்கள்
கழக நிர்வாகிகள் ஜோசப் சுப்பிரமணி விக்டர் மரியா தலைமையில் கேக் வெட்டி கொண்டாடி, பேருந்து பயணிகளுக்கு கேக் கொடுத்து இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.