இராமநாதபுரம், மே 13
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்துகொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் ராமலெட்சுமி, கிராம உதவியாளர் மோகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இவரது உடல் சனிக்கிழமை மாலை பெருநாழி முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி மறைவுக்குஅரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் சேதுராமன்

Leave a comment