தருமபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியுரில்
பாராளுமன்ற அவையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசியதை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில், மாவட்டதுணை செயலாளர் தோழர் வீராசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தேசத்தின் மக்களை நசுக்கும் விதமாகவும் மக்களை இன்னலுக்கும் பெருந்துயரங்களுக்கும் உள்ளாக்கும் விதமாக பல்வேறு ஆபத்தான சட்டங்களை மைனார்ட்டி ஒன்றிய அரசு நிறைவேற்ற காத்திருக்கிறது.
அதபோல ,Rss இயக்கம் தொடங்கியதின் முதன்மை கொள்கையான 100 ஆண்டில் இந்திய தேசம் முழுவதும் காவிமயமாக்க வேண்டும்.என்கின்ற பிராதன கொள்கையை நடைமுறைபடுத்த துடிப்பதின் வெளிப்பாடாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வங்கிகளை முடக்குவது பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களுக்கும், லஞ்சம்,ஊழலுக்கும் ஆதாரவாக செயல்படுவது பொருளாதர வீழ்ச்சியை ஏற்படுத்தி நாட்டுமக்களை அடிமையாக்கி சர்வதிகார போக்கை கையாளுவது என…
இப்படி எண்ணற்ற பெருந்துயரங்களுக்கு உள்ளாக்கவுள்ள சட்ட நிறைவேற்றம் குறித்து விவாதங்கள் மேலோங்கியது.
மக்களின் எதிர்ப்புகளையும் எதிர்கட்சிகளின் விவாதங்களையும் எதிர்கொள்ள முடியாமல் அதன் தீவிரத்தின் திசைவழியை மாற்றியமைக்கும் போக்காக தான்;
புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரித்து தன் மைனார்ட்டி ஒன்றிய அரசின் அமைச்சர் சகாக்கள் நேரடியாக பாசீஸத்தின் உண்மை தன்மையை வெளிப்படுத்தியது.
மேற்காணும் உள்ளடக்கத்தை மேற்கோள் காட்டி கண்டனத்தை பதிவு செய்து உரை நிகழ்த்தி நிறைவு செய்தேன்.
அண்ணன் வேங்கை.பொன்னுசாமி ஈரோடை (வடக்கு ) செயலாளர், அண்ணன் வீர.சிவா பொறுப்பாளர்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொறுப்பாளர் தோழர்.அன்பு,தலித் விடுதலை இயக்கம் தோழர்கள் நாகேந்திரன், மக்கள்அதிகாரம் மாயாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தனது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.