ஈரோடு டிச 26
ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவரும் கமலஹாசன் மன்ற முன்னாள் பொறுப்பாளருமான சமூக ஆர்வலர் எஸ்.வி.மகாதேவனின் 45 வருட நற்பணியும் நண்பர்களும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியீட்டுவிழா ஈரோட்டில் நடந்தது விழாவில் இதயம் நற்பணிஇயக்கம் சார்பாக 45000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சுடிதார் முதியோர்களுக்கு புடவைகள் சலவை தொழிலாளிக்கு சலவை பெட்டி குழந்தைகளுக்கு மருத்துவ நிதி உதவி மற்றும்
சமூக சேவகர்களுக்கு விருது போன்றவையும் வழங்கப்பட்டது .
இந்த விழாவிற்கு டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் எஸ்.வி.மகாதேவன் வரவேற்றார். அரசன் கண் மருத்துவமனை செல்வ லதா பன்னீர்செல்வம் பிரியாமோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மோனிகா டயபடிஸ் சென்டர் டாக்டர் தங்கவேலு,ரெஸ்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் ராமமூர்த்தி. டாக்டர் உசேன் அலி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுபதி எஸ்.ஆர்.எம் ஸ்வீட்ஸ் உரிமையாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா புத்தகத்தை வெளியிட அதை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்
பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம் பழனிச்சாமி திருப்பத்தூர் போலீஸ் டி எஸ் பி ஆனந்த குமார் சிவகாசி முகுந்தன் நாகராஜன், டாக்டர் கணபதி. சூர்யா சிவசுப்ரமணியம். சகூரா செந்தில்குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர் .