வேலூர் 23
வேலூர் மாவட்டம் , பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாபா சாகேப் டாக்டர் பி .ஆர்..அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்,ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி (URPI வேலூர் மாவட்டம்) சார்பில் மாவட்ட செயலாளர் நீல. கஜேந்திரன் தலைமையிலும் ,மாநில தலைமை செயலாளர் சரவணன், நிர்வாக குழு தலைவர் அதிரூபன் மாநில துணைத் தலைவர் சிஎம்சி ஆறுமுகம், மாநில இணை பொதுச் செயலாளர் பீமாராவ் மிலிந்தர், மாநில மகளிர் அணி தலைவி ஜெசி மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மாநில பொது செயலாளர் எஸ் .குணசேகரன் கே .ஜி .சத்தியசீலன் துணைச் செயலாளர் மேச்சேரி கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் நம்பிராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.உடன் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி (URPI வேலூர் மாவட்டம்) மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.